வடகொரியா ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி

சியோல்: வடகொரியா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகிறது.

ஏவுகணை சோதனை:

வடகொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட 'முசுடன்' ஏவுகணை சோதனையை நடத்தியது. ஆனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் 'முசுடன்' ஏவுகணை சோதனையை நடத்தியது. இருப்பினும் இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

8 முறை சோதனை:

இதுபற்றி தென்கொரிய கூட்டுப்படைகளின் தலைவர் விடுத்து உள்ள அறிக்கையில், வடக்கு பியாங்யாங் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு முசுடன் ஏவுகணை சோதனை நடைபெற்றதாகவும், அந்த ஏவுகணை, தரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறி விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. வடகொரியா இந்த ஆண்டில் 8 முறை முசுடன் ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதும், அவற்றில் ஒன்று மட்டுமே வெற்றி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...