உக்கிரமான சண்டை காரணமாக மொசூல் நகரில் இருந்து 900 பேர் தப்பி ஓட்டம்

ஈராக் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று மொசூல். இந்த நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது. அவர்களிடம் இருந்து இந்த நகரத்தை மீட்பதற்காக கடந்த திங்கட்கிழமை முதல் அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் ஈராக் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன.

இதன் காரணமாக அந்த நகரத்தில் உக்கிரமான சண்டை மூண்டுள்ளது.

அந்த நகரத்தில் இருந்து சுமார் 900 பொதுமக்கள் தப்பி, சிரியாவுக்குள் நுழைந்து விட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறுகிறது. அப்படி சிரியாவில் நுழைந்தவர்கள், அங்கு அகதிகள் முகாம்களில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மொசூல் நகரில் 15 லட்சம் மக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வது முக்கியம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே மொசூல் நகரில் இருந்து மேலும் பொதுமக்கள் தப்பி ஓட முடியாதபடிக்கு அவர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தடுப்பதாகவும், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்த முயல்வதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...