அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் - டொனால்ட் டிரம்ப் இறுதி விவாதம்

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இடையே இறுதி விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட 6 அம்சங்கள் அடிப்படையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளும் உரிமை பாதுகாக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். துப்பாக்கிகள் வைத்து கொள்ள கட்டுப்பாடுகள் வேண்டும் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

மேலும் கட்டுப்பாடற்ற துப்பாக்கி விற்பனையால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் ஹிலாரி கூறியுள்ளார். துப்பாக்கிகள் வைத்துக் கொள்வது தற்காப்புக்காகதான் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...