அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியர்களின் 'சாய்ஸ்' ஹிலாரி தான்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் வருவதை விட ஹிலாரி வருவது மேலானது என அமெரிக்க வாழ் இந்தியர்கள் கருதுவதாக சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. சிலிகன் வேலி பகுதியில் இந்திய வம்சாவளியினரிடம் டிரம்ப் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு பிறகு இந்திய வம்சாவளியினரிடம் அமெரிக்க அதிபராக யார் வர வேண்டும் என னிரும்புகிறார்கள் என்பது குறித்து கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் 59 முதல் 29 சதவீதம் பேரும், மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் 67 முதல் 27 சதவீதம் பேரும், மற்ற பிரச்னைகளில் 52 முதல் 22 சதவீதம் பேரும் ஹிலாரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் 48 முதல் 43 சதவீதம் பேரும், இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களில் 47 முதல் 40 சதவீதம் பேரும் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

89 சதவீதம் நடுநிலையாளர்களிடமும், 82 சதவீதம் ஆண்களிடமும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...