பிரம்படியால் பெண் கதறல்: பார்த்தவர்கள் கைதட்டி ரசிப்பு

ஆசேஹ்: இந்தோனேஷியாவில், பொதுமக்கள் முன்னிலை யில், பெண்ணுக்கு பிரம்படி வழங்கப்பட்டது. வலி தாங்காமல், அந்த பெண் கதறியதை, வேடிக்கை பார்த்தவர்கள், கைதட்டி ரசித்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், ஆசேஹ் மாகாணம், தன்னாட்சி அதிகாரம் பெற்றது; இங்கு, 'ஷரியத்' சட்டம், கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சூதாடுவது, மது குடிப்பது, திருமணத்திற்கு முன், ஆணும் பெண்ணும் சுற்றி திரிவது, ஓரினச் சேர்க்கை ஆகியவை, கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன. இந்த குற்றங்களை செய்பவர்களுக்கு, பலர் முன்னிலையில், பிரம்படி வழங்கப்படும்.

இந்நிலையில், ஷரியத் சட்டத்தை மீறிய, 20 முதல், 30 வயதுக்கு உட்பட்ட, ஏழு ஆண்கள், ஆறு பெண்களுக்கு, தலைநகர் பண்டா ஆசேஹில் உள்ள மசூதியில், பலர் முன்னிலையில், 23 பிரம்படி வழங்கப்பட்டது; இதில், ஒரு பெண், வலி தாங்காமல் கதறினார். அதை பார்த்த மற்றவர்கள், கைதட்டி ரசித்தனர்.

''தவறு செய்த ஒரு பெண், கர்ப்பிணி என்பதால், அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. குழந்தை பெற்ற பின், அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும்,'' என, பண்டா ஆசேஹ் துணை மேயர் ஜைனல் அர்பின் தெரிவித்தார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...