தாய்லாந்தில் அடுத்த அரசர் முடிசூடுவதற்கு முன் குறைந்தது 15 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; பிரதமர் பிரயூத் தகவல்

தாய்லாந்து நாட்டில் அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் மறைவிற்கு குறைந்தது 15 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா இன்று கூறியுள்ளார்.  இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரயூத், அரசியலமைப்பின்படி அடுத்த அரசர் தேர்வு பற்றிய விவகாரத்தில் தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் குடிமக்கள் கவலை கொள்ளவோ அல்லது அதனை கருத்தில் கொள்ளவோ கூடாது.

குறைந்தது 15 நாட்கள் இரங்கலுக்கு பின், அரசியலமைப்பின் பிரிவு 23ஐ நடைமுறைப்படுத்துவதென்பது சரியான நேரம் ஆக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக அரசாட்சி நடத்திய அரசர் பூமிபோல் கடந்த வியாழ கிழமை தனது 88வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.  இளவரசர் வஜீராலாங்கோர்ன் முடிசூடும் நிகழ்ச்சி அவரது தந்தை தகனத்திற்கு பின் நடைபெறும் என கடந்த வாரம் பிரதமர் கூறினார்.  எனினும், அதிகாரபூர்வ முறையில் முடிசூடுவதற்கு முன்பே, இளவரசர் அரசராக முடியும்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...