வங்காளதேசத்தில் பயங்கரவாத தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வங்காளதேசத்தில் கடந்த 2005–ம் ஆண்டு மினிபஸ் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் இந்து மதத்தை சேர்ந்த ஜெகன்னாத் பரே என்பவர் உள்பட 2 நீதிபதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட வங்காளதேச ஜமாதுல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த தலைவர் சயாக் அப்துர் ரகுமான் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2007–ம் ஆண்டு மே 29–ந் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைவரான அசாதுல் இஸ்லாம் என்கிற ஆரிப் சம்பவத்தின் போது தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரும் 2007–ம் ஆண்டு ஜூலை 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கும் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு மாதம் உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து குல்னா சிறையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அசாதுல் இஸ்லாம் தூக்கில் இடப்பட்டார். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...