சிங்கப்பூரில் தீபாவளி அலங்கார விரைவு ரயில்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நிலப் போக்கு வரத்து ஆணையம் தீபாவளியை ஒட்டி தீபாவளிஅலங்காரப் பெரு விரைவு ரயிலை இயக்கியது. இந்தியர்களையும், இந்தியர்களின் கலாசாரத்தையும் ஆதரிக்கும் வகையில், இந்த ரயில் இயக்கப்பட்டது. சிங்கப்பூர் போக்கு வரத்துத் துறை அமைச்சர்கா பூ வான் ரயிலைத் தொடக்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.

ரயில் முழுவதும் தீபாவளியைச் சித்தரிக்கும் வண்ண விளக்குகள் - மயில் - தாமரை மலர்கள் வரையப்பட்டு எழிலுற ரயில் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

லிட்டில் இந்தியா முழுவதும் அதிபர் துவக்கி வைத்த மின் விளக்கு அலங்காரங்கள் - தீபாவளியைச் சித்தரிக்கும் பெரு விரைவு ரயில் என சிங்கப்பூர் தீபாவளியைக்கொண்டாடும் உற்சாகத்தில் .திளைத்துக் கொண்டிருக்கிறது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...