பாகிஸ்தானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 22 பேர் பலி

பாகிஸ்தானில்  உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர் அருகே உள்ள கன்பூர் பகுதியில் இரு பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து லாகூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் சதிக்பாத்தில் இருந்து பைசலாபாத்திற்கு சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு பேருந்துகளையும் பிரிக்க முடியாததால், வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகே உயிருக்கு போராடியவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...