நான் அதிபராக தேர்வானால் இந்தியாவுடன் நெருங்கிய நட்பு

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள எடிசன் நகரில், குடியரசு கட்சியின் இந்து கூட்டணி ஏற்பாடு செய்த தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்டு பேசியதாவது: உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதனால் அது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. நான் அதிபர் ஆனால், அமெரிக்காவும், இந்தியாவும் மிகச் சிறந்த நட்பு நாடுகளாக இருக்கும். இந்தியாவுடன் பல விதமான வர்த்தகத்தில் ஈடுபடவுள்ளோம். இதனால் இரு நாடுகளுக்கும் நல்ல எதிர்காலம் ஏற்படும்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை  பிரதமர் மோடி தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. உங்கள் பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவான தலைவர். அவர் வரிமுறையை எளிமை படுத்தியுள்ளார். வரியை குறைத்துள்ளார். பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீத அளவில் வலுவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது மிகப் சிறப்பானது. ஆனால் அமெரிக்காவில் நமது பொருளாதாரம் வளர்ச்சியடையவே இல்லை. ஜீரோவாக உள்ளது. ஆட்சி அதிகாரத்திலும் பிரதமர் மோடி நல்ல சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளார். இது அமெரிக்காவுக்கும் தேவை. அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மிகச் சிறந்த மனிதரான மோடியை, நான் பாராட்டுகிறேன்.

நான் இந்தியா மற்றும் இந்து மதத்தின் மிகச்சிறந்த ரசிகன். இந்துக்களும், இந்தியர்களும் அமெரிக்காவை வலுப்படுத்தினர். இங்குள்ள இந்திய சமூகத்தினர் பலர் தொழிலதிபர்களாக இருப்பது மிகவும் என்னை கவர்ந்துள்ளது. நான் அதிபரானால், இந்தியர்கள் மற்றும் இந்து சமூகத்தினருக்கு வெள்ளை மாளிகையுடன் நல்ல நட்பு ஏற்படும். இந்தியாவுடனான தூதரக மற்றும் ராணுவ ஒத்துழைப்பு இன்னும் வலுப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...