அனைத்து தீவிரவாத குழுக்களையும் பாகிஸ்தான் தடை செய்ய வேண்டும்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. காஷ்மீர் வன்முறை குறித்து உலக நாடுகள் மத்தியில் பேச சென்ற பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கு, செப்டம்பர் 18ல் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.  à®¨à®¿à®¯à¯‚யார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டை உலக நாடுகள் ஏற்க மறுத்து விட்டன. குறிப்பாக அமெரிக்கா இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மீது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது. தற்போது மீண்டும் அதே கருத்தை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனடர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிரவாதிகள் மீது  à®•டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் தீவிரவாத குழுக்களை அங்கீகரிக்காமல் தடை செய்ய வேண்டும். அதன் பின் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நிறுத்த வேண்டும். தீவிரவாத தாக்குதலால், பிரிவினைவாதிகளின் வன்முறையால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட தீவிரவாத குழுக்களிடம் இருந்து பாகிஸ்தானை காப்பாற்ற அமெரிக்கா உதவ தயாராக உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்ட குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பாதுகாப்பான இடமாக கருத இடம் கொடுக்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலம்தான் தற்போது எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க முடியும். தங்கள் மத்தியில் உள்ள பிரச்னைகளை சமரச முயற்சி மூலம் தான் தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...