என்எஸ்ஜி குரூப், மசூத் அசார் விவகாரம் சீனாவின் நிலையில் மாற்றம் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

என்எஸ்ஜி குழுவில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்ததற்கும், மசூத் அசாரை ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாதி என அறிவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்த சீனாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியா வர உள்ளார். இந்த சூழ்நிலையில் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்தது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை ஐநாவால் அங்கீரிக்கப்பட்ட தீவிரவாதி என்ற அறிவிப்பை வெளியிட முயற்சி செய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது போன்ற சீனாவின் நிலையில் மாற்றம் உண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஜங் பதில் அளித்து கூறியதாவது:இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

அதேசமயம் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியாவை சேர்ப்பது, மசூத் அசாருக்கு தடை விதிப்பது போன்ற விவகாரங்களில் சீனாவின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் சீனாவின் நிலையைப்பற்றித்தான் எடுத்துக்கூறமுடியும். இருப்பினும் எதிர்காலத்தில் இருநாட்டு பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் இடையிலே பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து இருநாடுகள் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...