காமன்வெல்த் அமைப்பிலிருந்து மாலத்தீவு விலகல்

காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகுவதாக, மாலத்தீவு அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடான மாலத்தீவில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக, முகமது நஷீத் இருந்தார். 2012ல், முகமது நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அப்துல்லா யாமீன், அதிபராக பதவியேற்றார். 'நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, ஜனநாயக படுகொலை' என, சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டின. மாலத்தீவில், மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, மாலத்தீவு அரசுக்கு, காமன்வெல்த் அமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகமது நஷீத்தின் ஆட்சி நீக்கப்பட்டதிலிருந்தே, மாலத்தீவை, காமன்வெல்த் அமைப்பு அவமானப்படுத்தி வருகிறது. மாலத்தீவில் ஜனநாயகம் இல்லை என்பது போன்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறது. அதனால், காமன்வெல்த் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது நல்லதல்ல என்பதால், அதிலிருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...