ஐ.நா.,வின் புதிய பொதுச்செயலாளர் இன்று தேர்வு

தற்போது ஐ.நா., பொதுச்செயலாளராக இருந்து வரும் பான் கி மூனின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைய உள்ளது. இதனால் ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஐ.நா. சபையின் அடுத்த பொதுச்செயலாளராக போர்ச்சுகீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டெரெஸை தேர்வு செய்ய அக்டோபர் 5-ம் தேதி பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்தது.

இதனையடுத்து, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார். கட்டரெஸ், ஐ.நா. சபையின் 9-வது பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார். இவரது பதவிக் காலம் ஜனவரி 1-ம் தேதி முதல், டிசம்பர் 31, 2022 வரை இருக்கும். இவர் போர்ச்சுகல் பிரதமராக 1995-ம் ஆண்டு முதல் 2002 வரை பதவி வகித்துள்ளார். மேலும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையராக 2005-ம் ஆண்டு முதல் 2015 வரை பதவி வகித்து வந்தார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...