துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மியான்மரில் மோதல்; 12 பேர் சாவு

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய கலகக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பியாங்பிட் என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்களும், துப்பாக்கிகளையும், வாள்களையும் ஏந்தி வந்த கலகக்காரர்களும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர், கலகக்காரர் ஒருவர் என 5 பேர் பலியாகினர்.

இதற்கிடையே டாங் பாயிங் நயார் என்ற இடத்திலும், கலகக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 7 பேர் உயிரிழந்தனர். இறந்து போனவர்களின் உடல்கள் அருகே வாள்களும், தடிகளும் கிடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மோதல்களை தொடர்ந்து அந்தப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...