ஒரே நாளில் 20 பேர் கொன்று குவிப்பு: ‘சிரியாவில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும்’ போப் ஆண்டவர் பிரான்சிஸ் உருக்கமான வேண்டுகோள்

பெய்ரூட்: ஒரே நாளில் 20 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு போர்

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அவ்வப்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் அது தொடராமல் போவதால் சண்டை நீடிக்கிறது.

கடைசியாக கடந்த மாதம், ஜெனீவா நகரில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவும் பேச்சுவார்த்தை நடத்தி, சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய உடன்பாடு ஏற்படுத்தினர். இதுவும் ஒரு வார காலத்திற்குள் முடிந்து விட்டது.

சண்டை உக்கிரம்

இதன்காரணமாக தற்போது சிரியாவில் சண்டை உக்கிரம் அடைந்து வருகிறது. அங்குள்ள அலெப்போ நகரின் முக்கிய பகுதிகள், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன. அவற்றை கைப்பற்றுவதற்காக சிரியா படைகள், கிளர்ச்சியாளர்களுடன் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. 

அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் பிடியின்கீழ் உள்ள பகுதிகளை குறிவைத்து நேற்று வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

பள்ளிக்கூடம் சேதம்

இதேபோன்று தலைநகர் டமாஸ்கஸ்சின் புற நகரங்களில் அரசு வசம் உள்ள பகுதிகளில் கடும் குண்டு வீச்சு நடந்தது. இந்த குண்டு வீச்சில் அங்குள்ள பள்ளிக்கூடம் பெரும்பாதிப்புக்கு ஆளானது. இதில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவீச்சின்போது 18 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த ஒரு மாணவரை படுக்கையில் வைத்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் படத்தை ‘சனா’ செய்தி நிறுவனம் வெளியிட்டது. இன்னொரு படத்தில் ஒரு மாணவனும், மாணவியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, குளுக்கோஸ் ஏற்றும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 20 பேர் கொன்று குவிக்கப்பட்டது, சிரியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பரஸ்பரம் குற்றச்சாட்டு 

இதுபற்றி சிரியா அரசின் அதிகாரப்பூர்வ 'சனா' செய்தி நிறுவனம் கூறும்போது, "டமாஸ்கஸ் நகரின் புறநகர் பகுதிகளில் அபூர்வமாக குண்டு வீச்சு நடந்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இது காசாவில் குடியிருப்பு பகுதிகளிலும், உமயாத் மசூதிக்கு அருகிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்" என குறிப்பிட்டது. 

இதேபோன்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் அலெப்போ டுடே டி.வி.யும், காசியவுன் செய்தி நிறுவனமும் கூறும்போது, "அலெப்போ நகருக்கு அருகே பஸ்தான் அல் காசிர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன" என்று குற்றம் சாட்டின.




போப் ஆண்டவர் உருக்கம்

இந்த நிலையில் சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று உருக்கமுடன் அழைப்பு விடுத்தார்.

இதுபற்றி அவர் வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மக்களிடம் பேசும்போது, "அப்பாவி மக்கள் வெளியேற உதவுகிற வகையில் சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும். உள்நாட்டுப் போரில் இருந்து அப்பாவி மக்களை அதிலும் குறிப்பாக கொடூரமான குண்டு வீச்சுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க எனது செல்வாக்கை தலைவர்களிடம் பயன்படுத்தி மன்றாடிக்கேட்க விரும்புகிறேன்" என குறிப்பிட்டார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...