பெரிய அளவில் தெற்கு ஆசிய கூட்டமைப்பு; இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் திட்டம்

சார்க் கூட்டமைப்பில் இந்தியாவால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, ஈரானை சேர்த்து, மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

யூரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவிற்கு ஆதரவாக, வங்கதேசம், பூடான், ஆப்கன் நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. இதனையடுத்து மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சார்க் அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவிற்கு போட்டியாக தெற்காசிய அளவில், சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை இணைத்து பெரிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் குழுவினர் கூறுகையில், மிகப்பெரிய தெற்காசிய அமைப்பு உருவாகி வருகிறது. இந்த அமைப்பில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய அண்டை நாடுகள் இருக்கும். சீனா - பாகிஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு திட்டம், தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவை இணைக்கும். சீனாவுக்கு மட்டுமல்லாமல், மத்திய ஆசிய நாடுகளுக்கும் குவாடர் துறைமுகம் எளிதாக அணுகுவதாக இருக்கும். இந்த அமைப்பில் இந்தியா இணைய வேண்டும் எனக்கூறினார்

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...