அமெரிக்க அதிபர் தேர்தல் 2வது விவாதத்திலும் ஹிலாரிக்கு வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இரண்டாவது சுற்று விவாத நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டண் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 57 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்தவதற்காக வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் கிளின்டணின் மனைவி ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் களத்தில் உள்ளனர். அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதங்கள் தற்போது தொடங்கி உள்ளது. சமீபத்தில் நடந்த முதல் சுற்றில் இரு வேட்பாளர்கள் வேலைவாய்ப்பு, வரி ஏய்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக விவாதித்தனர்.இருவருக்கும் இடையே, 2வது சுற்று நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில்  டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டணும் சரமாரியாக குற்றஞ்சாட்டிக் கொண்டனர். பெண்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே அனல் பறக்கும் விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் ஆக்ரோஷத்துடன் பேசிய டிரம்ப், ‘‘இ-மெயில் அழிப்பு மோசடி தொடர்பாக, நான் ஆட்சிக்கு வந்தால், ஹிலாரியை சிறையில் அடைப்பேன்’’ என்றார்.

இந்த விவாத நிகழ்ச்சிக்கு பின்னர், அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டண் வெற்றி பெறுவார் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். 57 சதவீதம் பேர் ஹிலாரி வெற்றி பெறுவார் என்றும், 34 சதவீதம் பேர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்றும் கருத்து கூறியுள்ளனர். இரண்டாவது சுற்றிலும் ஹிலாரிக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்து இருப்பதன் மூலம் ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.முதல் சுற்று விவாதத்திற்கு பின்னர் 62 சதவீதம் பேர் ஹிலாரிக்கும், டிரம்ப்க்கு 27 சதவீதம் பேர் மட்டும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...