சீனா ராணுவத்தில் 3 லட்சம் ராணுவ வீரர்கள் வேலை இழப்பு போராட்டத்தில் குதித்தனர்

உலகின் மிகப்பெரிய சீனாவின் மக்கள் விடுதலை ராணுத்தில்  மொத்தம் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர்.சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வருடம்  உதிரிபடைகளை குறைக்கவும் செலவுகளை குறைக்கவும் ராணுவத்தில் 3 லட்சம் வேலைகளை குறைத்தார். இதை தொடர்ந்து 3 லட்சம் ராணுவ வீரர்கள் வேலை இழந்தனர்.இவர்கள் அனைவரும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 à®‡à®©à¯à®±à¯ சீனாவின்  தலைநகர் பீஜிங்கின் தலைமை பாதுகாப்பு அலுவலகம் எதிரே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் பல மணி நேரம் நீடித்தது.பலரும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சுத்தி மற்றும் அரிவாள் முத்திரை பதித்த பச்சை சீருடையில் அணிந்திருந்தார்கள்.

போராட்டத்திற்கான காரணம் தெரியவில்லை.பத்திரிகைகள் அவர்களை பேட்டி எடுக்க தடுக்கப்பட்டு உள்ளது. மேலும்  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு  அமைச்சகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேடுவது தடுக்கப்பட்டு உள்ளது.

நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். 

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...