பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை

லண்டன்: பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஹேக்கர்கள்

ஆப்பிள் வாட்சுகள் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக உலகம் முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் இணையதளத்தை ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்ததாகக் கடந்த வாரம் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல, உலகின் முன்னணி தடகள வீரர்கள் சிலரின் மருத்துவ அறிக்கைகளையும் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்து, இன்டர்நெட்டில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை

இந்நிலையில் பிரிட்டன் பிரதமராக தெரேசா மே பதவியேற்ற பின், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் ஆப்பிள் வாட்ச்சும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்க்கக்கூடும் என்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக டேவிட் கேமரூன் பிரிட்டன் பிரதமராக இருந்த போது அமைச்சரவைக் கூட்டங்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கொண்டுவரத் தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...