ஆஃப்கானிஸ்தானில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாகாணத்தின் தலைநகர் மீது தாலிபன் தாக்குதல்

ஆஃப்கானிஸ்தானில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹெல்மண்ட் மாகணத்தின் தலைநகர் லஷ்கர் கா மீது தாலிபன் படையினர் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

ஆளுநரின் இல்லத்திற்கு சில கிலோ மீட்டர்களுக்கு அருகே இப்போது தீவிரவாதிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், நகரின் மையப்பகுதிக்கு அருகே மோதல்கள் நடந்துவருவதாகக் கூறப்படுவதை மாகாணத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் மறுத்துள்ளார்.

திங்கட்கிழமை அன்று தற்கொலை குண்டு வெடிப்புடன் தொடங்கிய தாக்குதலில் 10 ஆஃப்கன் போலிசார் கொல்லப்பட்டனர்.

லஷ்கர் கா வீழ்ந்தால் அது தாலிபன் அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க வெற்றியாக இருக்கும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...