மேத்யூ புயல் எதிரொலி: புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி: ஒபாமா அறிவிப்பு

புளோரிடா: 'மேத்யூ' புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கவிருக்கிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

"மேத்யூ' புயல்:

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய "மேத்யூ' புயல் லத்தீன் அமெரிக்க நாடான ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளில் ருத்ரதாண்டவம் ஆடியது. இப்புயலுக்கு இதுவரை 140க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் மேத்யூ புயல், அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை நேரத்தில் புளோரிடாவை தாக்க உள்ளது. இனையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எமர்ஜென்சி அறிவிப்பு:

இந்நிலையில் மேத்யூ புயல் காரணமாக, புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். புளோரிடாவை தொடர்ந்து மேத்யூ புயல் தென் மற்றும் வட கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...