சீனாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை முயற்சி தொடக்கம்

பீஜிங்: இந்திய தொலைத்தொடர்புத்துறை 4ஜி எனப்படும் அதிவிரைவு சேவையை தற்போது வழங்கிவரும் நிலையில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறைக்கான தொலைத்தொடர்பு சேவையை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. அதற்கான முதற்கட்ட சோதனையில் சீனா இறங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் உள்ள சுமார் 130 கோடி மக்கள் கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் 4ஜி சேவை இணைப்புகளை பெற்றுள்ளனர். வினாடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் செயலாற்றும் இந்த 4ஜி இணைப்பைவிட அதிகவேகம் கொண்டது இந்த 5ஜி சேவை இது வினாடிக்கு 20 ஜபி வரை அதிவேகமாக இயங்கக்கூடியதுமான 5ஜி இணைப்பை தங்கள் நாட்டு மக்களுக்கு விரைவாக அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

கைபேசி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான தகவலைப்பெற விரும்பும்போது தற்போது 4ஜி இணைப்பின் மூலமாக பெற 10 மில்லிவினாடி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் இதே தகவலை 5ஜி இணைப்பின் வழியாக ஒரே மில்லிவினாடியில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உள்ள 100 முக்கிய பெருநகரங்களில் இந்த 5ஜி சேவையை தொடங்குவதற்கான சிக்னல் கோபுரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பரிமாற்ற கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கும் சோதனைரீதியான முதல்கட்ட முயற்சியில் சீனா தற்போது களமிறங்கி உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...