சிரியாவில் திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல்; 32 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவிலுள்ள டால்டவில் எனும் கிராமத்தில் திருமண விழாவில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 32 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

தற்கொலைப்படை தாக்குதல்:

சிரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள டால்டவில் எனும் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் நுழைந்த பயங்கரவாதி, மணமக்கள் திருமணத்துக்கான உறுதி மொழிகளை எடுத்து கொண்டிருக்கும் போது, தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 32 பேர் பலியாயினர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (அக்.,3) நள்ளிரவில் நடந்துள்ளது.

ஐ.எஸ்., பொறுப்பேற்பு:

இத்தற்கொலைப்படை தாக்குதலில் மணமக்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை சேர்ந்த போராளி, துப்பாக்கிச்சூடு நடத்தி, பின் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து 40க்கும் மேற்பட்டோரை கொன்றதாக தெரிவித்துள்ளது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...