உணவில் விஷம் கலந்து ஐ.எஸ்.தலைவரை கொல்ல சதி?

பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியை உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சிசிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உணவில் விஷம்

ஈராக், சிரியா எல்லை பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அல்கொய்தா அமைப்பில் இருந்து பிரிந்த வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈராக்கில் இருந்து வெளிவரும் பல்வேறு அரேபிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.எஸ்., அமைப்பின் தலைவர் அபு-பக்கர் அல் பாக்தாதி, இவரது மூன்று உதவியாளர்கள் ஈராக்கின் நைன்வேக் பீ ஆஜ் மாவட்டத்தில் தங்கியிருந்த போது மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது தான் தெரிந்தது சாப்பிட்ட உணவில் யாரோ விஷம் கலந்து கொடுத்திருப்பது.

தீவிர சிகிச்சை:

உடனடியாக ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உணவில் விஷம் கலந்தது கொல்ல முயற்சித்தது யார் என்பது குறித்து பலரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

10 மில்லியன் டாலர் பரிசு:

ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் பல முறை காயங்களுடன் தப்பினான் பாக்தாதி, இவனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்தாலோ, இருப்பிடம் குறித்த தகவல்தெரிவித்தாலோ, 10 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...