இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பினால் 400 சுற்றுலாப் பயணிகள் அவசர வெளியேற்றம்

இந்தோனேசியாவில் சுற்றுலாத் தலமான பருஜானி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 400 பயணிகள் புதன்கிழமை அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பருஜானி எரிமலை செவ்வாய்க்கிழமை வெடித்து புகை கக்கத் தொடங்கியது. அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய புகை இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பரவியது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அந்தப் பகுதியில் சுமார் 400 சுற்றுலாப் பயணிகள் இருந்தது பதிவேடுகள் மூலம் தெரிந்தது. அதையடுத்து மீட்புக் குழுவினர் அந்தப் பகுதிக்கு புதன்கிழமை விரைந்து சுற்றுலாப் பயணிகளை மீட்டனர்.எரிமலை வெடித்த பகுதிக்கு 3 கி.மீ. சுற்றுப் பரப்புக்குள் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...