அமெரிக்காவில் அரசு அங்கீகாரம் பெற்ற முதல் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாட வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்...

அமெரிக்காவில் தமிழர் திருநாள் பொங்கலுக்கு வர்ஜீனியா முதல் மாநிலமாக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரம் கிடைத்து முதல் பொங்கல் விழாவை வாசிங்டன் பகுதி தமிழர்கள் மிகப்பெரிய விழாவாக முழு நாள் விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்கள். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், இந்த பகுதியில் இருக்கும் ஆறு தமிழ்ப்பள்ளிகளையும், தொண்டு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இந்த விழாவை வரும் சனவரி 20, 2018–ல் நடத்த திட்டமிட்டு வருகிறது.

இந்த முழுநாள் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து சினிமாத் துறையிலிருந்து இயக்குநர் திரு.பாக்யராஜ் மற்றும் திருமதி.பூர்ணிமாபாக்கியராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழ் சார்ந்து முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்துகொள்கிறார். வசந்த் வசீகரனின் இரண்டு மணி நேர இன்னிசை நிகழ்ச்சி தமிழ் மரபு மற்றும் உற்சாகம் ஊட்டும் வகையில் நடைபெறுகிறது. இதில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற செல்வி.ஜெசிக்கா ஜுட் கனடாவிலிருந்து கலந்துகொள்கிறார். தமிழகத்திலிருந்து இரண்டு ஆட்சிப்பணியில் உள்ளவர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...