கோவை மத்திய சிறையின் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜுலை 6-ம் தேதி கடைசி நாள்

கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சமையலர், நாவிதர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜுலை 6-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சமையலர், நாவிதர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜுலை 6-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு சிப்ப எழுத்தர், ஒரு நாவிதர், இரண்டு சமையலர், ஒரு லாரி ஓட்டுநர், இரண்டு நெசவுப் பணியாளர், ஒரு பாய்லர் பயர்மேன், சிங்காநல்லூர் வெளிச்சிறையில் உள்ள ஒரு சமையலர், கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள 9 துப்புரவு பணியாளர் மற்றும் 10 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த ஆண் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை (மொபைல் எண் குறிப்பிட்டு) சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு வரும் ஜுலை 6-ம் தேதிக்குள் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பதவிகளை நிரப்புவதற்கான நேர்காணல் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பின்னர் தெரிவிக்கப்படும். 

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...