கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம்

கோவை : கோவை மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோவை (மகளிர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆனைகட்டி ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 2019ம் கல்வியாண்டு பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் நேற்று முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில், கோவை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் லக்ட்டிரிசன், எம்.எம்.வி. ஃபில்ட்டர், டர்னர், மெஷினிஸ்ட், மெஷினிஸ்ட் கிரைண்டர், ஆர் அன்ட் ஏ.சி, கோபா, வயர்மேன், வெல்டர், ஐ.சி.டி.எஸ்.எம்., ஐ.எம்., எம்.எம்.டி.எம்., சி.ஷ.இ., ஷீட் மெட்டல் வொர்க்கர் போன்ற பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை (ஆண்ஃபெண்) இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விபரங்கள் நேரடியாக வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனை செய்திட இயலாத விண்ணப்பதாரர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இலவசமாக பதிவேற்றம் செய்திட தக்கவழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம், அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள், NIMI புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. பிரதி மாதமும் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. மேலும், தகுதியின் அடிப்படையில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி அரசால் வழங்கப்படுகிறது.

இதற்கான கல்வித்தகுதி தொழிற்பிரிவுகளைப் பொறுத்து 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு இலவச உணவு வசதியுடன் தங்கும் விடுதி (தகுதியின் அடிப்படையில்) வழங்கப்படும். வயது வரம்பு 14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்சவயது வரம்பு இல்லை). இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...