சேலம் : பண்டிகை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கோவை - தாம்பரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சேலம் : பண்டிகை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கோவை - தாம்பரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் : 06053/06054 தாம்பரம் - கோவை - தாம்பரம் முன்பதிவில்லாத பயணிகள் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயிலில் 2 இரண்டாம் கட்ட பெட்டிகளும், 12 பொதுப்பிரிவு பெட்டிகளும், 2 லக்கேஜ்களுக்கான பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ரயில் எண் : 06053 தாம்பரம் - கோவை முன்பதிவில்லாத சிறப்பு ரயில், 3 மற்றும் 5-ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 07.45 மணிக்கு கோவையை நோக்கி புறப்படுகிறது.
ரயில் எண் : 06054 கோவை - தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில், 4 மற்றும் 7-ம் தேதிகளில் கோவையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.