உக்கடம் - ஆத்துபாலம் வழித்தடத்தை நாளை முதல் ஒரு வழிப்பாதையாகப் பயன்படுத்த பேருந்துகளுக்கு உத்தரவு

கோவை: மேம்பால பணிகள் காரணமாக உக்கடம் - ஆத்துபாலம் இடையேயான வழித்தடத்தை ஒருவழிப்பாதையாகப் பயன்படுத்துமாறு அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை: மேம்பால பணிகள் காரணமாக உக்கடம் - ஆத்துபாலம் இடையேயான வழித்தடத்தை ஒருவழிப்பாதையாகப் பயன்படுத்துமாறு அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 

உக்கடம் - ஆத்துபாலம் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்த 3-6-2018 முதல் கனரக வாகனங்கள், ஈச்சர் லாரிகள், டிப்பர் லாரிகள் போன்றவை இவ்வழியைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவை செல்ல மட்டும் அனுமதி வழங்கியிருந்த நிலையில், மேம்பாலப் பணிகள் காரணமாக பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்பட்டன. இதனைத் தடுக்கும் விதமாக, கடந்த சில நாட்களாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஒரு வழிப்பாதையாக உக்கடம் முதல் ஆத்துபாலம் வரை செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டது. 

இந்நிலையில், சோதனை ஒட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நாளை (ஜுலை 3) முதல் உக்கடம் பேருந்து நிலையம் வரும் அனைத்துப் பேருந்துகளும், ஆத்துப்பாலத்திலிருந்து சுண்ணாம்பு கால்வாய், புட்டு விக்கி லேக் சாலை, சேத்துமா வாய்க்கால், செல்வபுரம், மீன் மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர வேண்டும். அதேசமயம், உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல எந்தத் தடையும் இல்லை.

இது குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் (மேற்கு) கூறுகையில், "காவல்துறை ஆணையாளர் பெரியய்யா மேற்பார்வையில், காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார் உத்தரவின் பேரில், இந்தப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இந்தப் போக்குவரத்து மாற்றம் பாலப்பணிகள் நடைபெறும் வரை அமலில் இருக்கும்", என்றார்.

உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலைபேட்டை, கேரளா மாநிலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...