கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரியில் அக்.14-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு ஆணைகினங்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14.10.2017 அன்று கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரியில் நடைபெற உள்ளது.  இது தொடர்பான மாவட்ட அளவிலான அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நேற்று செப்.,27) மாவட்ட ஆட்சியர் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாட்சி சார்ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு இம்முகாம் சிறப்பாக நடைபெறவும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தனர். இம்முகாம் சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து இம்முகாமில் அதிக அளவில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார். 

இக்கூட்டத்தில் கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி நிர்வாக அலுவலர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை, தொழிற்சாலைகள், பாதுகாப்புத்துறை போன்ற அனைத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...