ஒவ்வொரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ சேவை - மாநகராட்சி

தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ், நகர்புறங்களில் வசிக்கும் மக்களின், குறிப்பாக எளிதில் தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இடங்களில் வசிப்போர், குடிசைவாசிகள், வீடற்ற சாலையோரம் வசிப்போர், சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற தொழில் புரிவோர் மற்றும் ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்படி சேவைகளை வலுப்படுத்தும் விதமாக நகர்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை அவர்களுக்கு உகந்த நேரத்தில் வழங்கிடவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பினை கண்டறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காத்திருக்க வேண்டிய காத்திருப்பு நேரத்தை தவிர்க்கவும், அம்மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை குறைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் சமுதாய நல மையங்களில் (சிங்காநல்லூர், எம்.எம்.ஹோம், பீளமேடு, செல்வபுரம் மற்றும் எஸ்.எல்.எம்.ஹோம்) பல்துறை மருத்துவ சேவைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு 5 நகர்புற சமுதாய நல மையங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4:30 மணி முதல் 8:30 மணி வரை, குறிப்பிட்ட சிறப்பு மருத்துவரால் மருத்துவ சேவை கீழே குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படுகிறது.

திங்கள் - பொது மருத்துவம்

செவ்வாய் - மகப்பேறு மருத்துவம்

புதன் - குழந்தை நல மருத்துவர்

வியாழன் - எலும்பு நோய் மருத்துவர் மற்றும இயங்கியல்

வெள்ளி - மாதத்தின் முதல் வெள்ளி கண் மருத்துவம், மாதத்தின் இரண்டாம் வெள்ளி பல் மருத்துவம், மாதத்தின் மூன்றாம் வெள்ளி காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மாதத்தின் நான்காம் வெள்ளி தோல் மருத்துவம்.

பொதுமக்கள் மேற்படி 5 நகர்புற சமுதாய சுகாதார மையங்களை அணுகி சிறப்பு மருத்துவ சேவைகளின் பயனை பெறுமாறு மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...