கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு கூடுதல் வைப்புதொகை செலுத்த காலக்கெடு நீட்டிப்பு

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின் படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் இருந்த 60 வார்டுகளில் 01.10.2013-க்கு முன்னர் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத் தொகையாக ரூ.4000 வீட்டு உபயோகமல்லாத முறை இணைப்புதாரர்கள் ரூ.7000 செலுத்தப்பட வேண்டும்.

இதற்கான அறிவிப்பு அனைத்து இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு 15.09.2017-க்கு முன்னர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், 01.10.2013-க்கு முன்னர் குடிநீர் இணைப்பு பெற்று அறிவிப்பு கிடைக்கப் பெறாத இணைப்புதாரர்கள் சம்மந்தப்பட்ட வரிவசூல் மையங்களுக்கு குடிநீர் கணக்கெடுப்பு புத்தகத்தைக் கொண்டு சென்று குடிநீர் இணைப்பு எண்ணின் அடிப்படையில் இத்தொகையினை செலுத்திக் கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, கூடுதல் வைப்பு தொகையினை தவறாமல் செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...