குடிநீருக்கான டெபாசிட் தொகையை நாளை மறுநாளுக்குள் செலுத்த மாநகராட்சி உத்தரவு

கோவை மாநகராட்சி வார்டுப் பகுதியில் வசித்து வரும் மக்கள் குடிநீர் இணைப்புக்கான, டெபாசிட் தொகையை நாளை மறுநாள் (செப்டம்பர் 15)-க்குள் செலுத்த மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், சொத்து வரி சீராய்வு, குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், குத்தகை மற்றும் ஏல இனங்கள் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெற, ரூ.5,000 மற்றும் வணிக பயன்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட்டாக செலுத்த வேண்டும். இதற்கு முன் இணைப்பு பெற்றவர்கள் வீட்டு இணைப்புக்கு ரூ.1,000 மற்றும் வணிக பயன்பாட்டுக்கு ரூ.3,000 செலுத்தி இருந்தனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 2 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. 2013, அக்டோபர் 1ம் தேதிக்குப் பின் இணைப்பு பெற்றவர்கள் டெபாசிட் தொகையில் நிலுவை உள்ளது. இதனை வரும், 15-க்குள் செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதனிடையே, கோவை மாநகராட்சி புதிய வரி சீராய்வு என்ற பெயரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது, குப்பைகளுக்கு வரி போடுவது, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகையாக 4,000 ரூபாய் செலுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்து பல்வேறு வார்டுப் பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...