அரசு இ-சேவை மையங்களில் மின்னணு சான்றிதழ் பெறலாம் என கருவூல அலுவலர் தகவல்

தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ-சேவை மையங்களை அமைத்து அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது கூடுதல் சேவையாக கடந்த 2016 நவம்பர் 24ம் தேதி முதல் ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் வழங்கும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

மின்னணு வாழ்வு சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியர்கள் இந்நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையைப் பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும்.

இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.10 மட்டும் வசூழிக்கப்படும் என கோவை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...