தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்டதன் படி, நாளை முதல் கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள 500 மதுபான கடைகள் செயல்படாது என மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அறிவித்துள்ளது.



சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 500 மதுபான கடைகள் செயல்படாது என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுதொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு இன்று மேற்கொண்டுள்ளது. 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி இதற்கான அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றது. 

கோவில்கள் மற்றும் பள்ளிக்கூடங்களின் அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டன. இதன்படி நாளை (22-ந்தேதி) முதல் தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. 

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் 500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...