திருப்பூர் துணை ஆட்சியர்கள் திடீர் மாற்றம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த துணை ஆட்சியர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பல்வேறு துணை ஆட்சியர்கள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியாக இருந்த ரவிச்சந்திரன் சேலம் தனித்துணை ஆட்சியராக (முத்திரைத்தாள்) நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவை கலால் மேற்பார்வையாளராக இருந்த கணேஷ் திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காமராஜ் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக விழுப்புரம் ஆர்.டி.ஓ.வாக இருந்த ரவிச்சந்திரன் திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கலால் உதவி ஆணையாளராக இருந்த செல்வி, திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவை - கொச்சின் - சேலம் பைப்லைன் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த செந்தில் அரசன் தாராபுரம் ஆர்.டி.ஓ. வாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக இருந்த அம்பாயிரநாதன் சேலம் ஆர்.டி.ஓ.வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...