நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு பணம் வழங்க முடிவு!

கோவையில் செயல்பட்டு வந்த இரண்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காமல் உள்ள 700 பேருக்கு டான்பிட் நீதிமன்ற உத்தரவுபடி முதலீட்டு பணத்தை திரும்ப வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையில் செயல்பட்டு வந்த 2 நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்த நபர்களுக்கு முதலீட்டு பணத்தை திரும்ப வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் இயங்கி வந்த சீனிவாச பெருமாள் பைனான்ஸ் கார்ப்பரேசன்ஸ் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, தொகை திரும்பப் பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர். 

இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலீட்டாளர்களுக்கு டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. 

எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார், வாக்காளர் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...