கோவையில் 7 ரயில்களின் சேவை நாளை முதல் மாற்றம்

கோவை-பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மதுக்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால், 7 ரயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மதுக்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 7 ரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை-பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மதுக்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன.

எனவே சொர்ணூரில் இருந்து 11-ந் தேதி காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் ரயில் (எண் 06458), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 16324) ஆகியவை பாலக்காடு-கோவை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்.06459) கோவை-பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இது தவிர, திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு வரும் ரயில் (எண் 16843), போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

சொர்ணூரில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 06804), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 11.05 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 22609) ஆகியவை பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு பாலக்காடு நகரம் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண் 06807) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...