கோவையில் மே 1ம் தேதி மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவு!

உலகம் முழுவதும் மே.1ம் தேதி உழைப்பாளர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, நாளை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: உலகம் முழுவதும் மே.1ம் தேதி உழைப்பாளர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அரசு விடுமுறை தினமான அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களின் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம்

மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அனைந்தும் வரும் 01.05.2023 (திங்கட்கிழமை) அன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மே தினம் Dry Day கடைபிடிப்பதால் விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது, சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...