ஏப்ரல் 30க்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை - கோவை மாநகராட்சி அறிவிப்பு!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை ஏப்ரல்‌ 30ஆம்‌ தேதிக்குள்‌ செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாநகராட்சிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள்‌ சட்டம்‌ 1998க்கு திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டு, 13.04.2023 முதல்‌ தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள்‌ விதிகள்‌ 2023, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள்‌ சட்டம்‌ 1998, பிரிவு 84(1)-ல் ”Five percent property tax payable by an assesse, subject to a maximum of five thousand rupees shall be granted as an incentive, who has paid the property tax within thirty days from the date of commencement of the halfyear” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.

இந்நிலையில், சொத்து உரிமையாளர்கள்‌ சொத்து வரியினை செலுத்த மாநகராட்சி மூலம்‌ பல்வேறு வகையான விழிப்புணர்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி சொத்து உரிமையாளார்களுக்கு குறுந்தகவல்‌ அனுப்புதல்‌, வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம்‌ அறிவிப்புகள்‌ வாயிலாக விழிப்புணா்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து உரிமையாளர்கள்‌ சொத்துவரியினை தங்களது இல்லம்‌ தேடி வரும்‌ வரி வசூலிப்பாளா்கள்‌, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்‌, வரிவசூல்‌ மையங்கள்‌ ஆகியவற்றில்‌ கடன்‌ மற்றும்‌ பற்று அட்டை, காசோலை மற்றும்‌ வரைவோலை மூலமாகவும்‌ டிஜிட்டல்‌ பரிவர்த்தனை வாயிலாகவும்‌ சொத்துவரியினை செலுத்த வசதிகள்‌ ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளாரகள்‌ தங்களது சொத்து வரியினை ஏப்ரல்‌ 30-ஆம்‌ தேதிக்குள்‌ செலுத்தி ஊக்கத்தொகையினை பெறலாம்.

இதன்‌ மூலம்‌ மாநகராட்சியில்‌ மேற்கொள்ளப்படும்‌ வளர்ச்சி பணிகளில்‌ தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...