கலைத்துறையில் சாதித்தவரா நீங்கள்..? - விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள், அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஆண்டுதோறும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் இசை நாட்டியம், ஓவியம், நாட்டுப்புறக் கலைகள், நாடகம், கருவியிசையில் சாதனை படைத்த கலைஞர்களில் 18 வயது அதற்குட்பட்டோருக்கு "கலை இளமணி" விருதும், 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு "கலை வளர்மணி" விருதும், 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு 'கலை சுடர்மணி" விருதும், 51 வயது முதல் 65 வயது பிரிவினருக்கு "கலை நன்மணி" விருதும், 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு 'கலை முதுமணி" விருதும் வழங்கப்பட உள்ளன.

கோயம்புத்தூர் மாவட்ட கலைஞர்கள் விருது பெற தங்களது சுய விவர குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து உரிய சான்றுகளுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, மண்டல அலுவலகம், செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டி அஞ்சல், கோயம்புத்தூர்-641050 என்ற முகவரிக்கு 02.05.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரம் வேண்டுவோர் 0422 2610290 அல்லது 9442213884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...