பராமரிப்பு பணி காரணமாக போத்தனூர் வழியாக இயங்கும் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் ரத்து

நாளை 25-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் டாடா நகரில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக எா்ணாகுளம் செல்லும் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 18189) ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை: தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக போத்தனூா் வழியாக இயக்கப்படும் ஜார்கண்ட் மாநிலம் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலம், சாம்பல்பூா் ரயில்வே கோட்டம் தியோபாகல் - பாா்பலி இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை 25-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் டாடா நகரில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக எா்ணாகுளம் செல்லும் டாடா நகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 18189) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்:18190) 28-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...