கோவையில் வரும் செப் 16 ஆம் தேதி காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் ஏலம் - பொதுமக்களுக்கு அழைப்பு..!

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 37 வாகனங்களுக்கான ஏலம் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு, அவிநாசி ரோடு பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.



கோவை: கோவை மாநகர போலீசாரால் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில், 12 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 22 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 37 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு, கோவை அவிநாசி ரோடு பி.ஆர்.எஸ் மைதானத்தில் இந்த ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக, வரும் 14 ஆம் தேதி முதல் ஏலம் விடப்படும் வாகனங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள், வாகனங்களை பார்வையிட்டு,15ம் தேதி மாலை 5 மணிக்குள் டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும்.

அதன்படி, இருசக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.1,000 மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.2,000 ஐ செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்

அதேபோல, ஏலம் எடுப்பவர்கள் ஜி.எஸ்.டி., வரியுடன் முழுத் தொகையை 16ஆம் தேதி அன்று செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏலம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு 0422 - 2241 795 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...