கோவை காரமடை வட்டாரத்தில் வரும் 27ஆம் தேதி இளைஞர் திறன் திருவிழா - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வரும் 27 ஆம் தேதி காரமடை பகுதியில் வட்டார அளவில் நடைபெறவுள்ள இளைஞர் திறன் திருவிழாவில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் பங்கேற்கலாம், என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு.


கோவை: காரமடை பகுதியில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளதாகமாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் காரமடை பகுதியில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.இதில் DDUGKY, RSETI, TNSDC கீழ் நடைபெறும்இந்த இலவச திறன் பயிற்சியில் 18 முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

இந்த திறன் பயிற்சியானது மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில்9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

DDUGKY திட்டத்தின் கீழ் warehouse supervisor, retail sales associate, Android mobile phone operator, assistant catering manager, general duty assistant, sewing machine operator knits, business correspondent and business facilitator ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.

அதேபோல், RSETI திட்டத்தின் கீழ் beauty parlour management, women's tailor, candle making, pickle and masala powder, costume jewellery, Bee keeping ஆகிய பயிற்சிகள் மற்றும் TNSDC திட்டத்தின் கீழ் IT- It's, Apparel, Automotive, Textile and Handlooms, Healthcare போன்ற sector கீழ் பயிற்சிகள் நடைபெற உள்ளது.

இந்த இளைஞர் திறன் திருவிழாவில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் தங்களது கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரம், புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...