கோவை வழித்தடத்தில் பாலக்காடு-ஈரோடு மெமு ரயில் - ஜூலை 29-ந் தேதி முதல் இயக்கம்..!

பாலக்காடு, கோவை, திருப்பூரிலிருந்து பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவ-மாணவிகளின் வசதிக்காக இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து நாளை (ஜூலை 29-ந் தேதி) முதல் இயக்கப்பட உள்ளது.


கோவை: கோவை வழித்தடத்தில் பாலக்காடு-ஈரோடு மெமு ரயில் ஜூலை 29-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 2-ஆண்டுகளாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாலக்காடு, கோவை, திருப்பூரிலிருந்து பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவ-மாணவிக்கு வசதிக்காக இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் நாளை ஜூலை 29-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை ஜூலை 29-ந் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர பிற்பகல் 2.52 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் மெமு ரயில் (06818) இரவு 7.10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடையும். ஜூலை 30-ந் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் மெமு ரயில் (எண்: 06819) காலை 11.45 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர், வஞ்சிபாளையம், சோமனூர், சூலூர் சாலை, இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, கோவை, போத்தனூர், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு, கஞ்சிக்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோன்று ஈரோடு-கோவை மெமு ரயில் (நாளை) ஜூலை 29-ந் தேதி முதல் நேரம் மாற்றி இயக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு-கோவை மெமு ரயில் (06801) காலை 7.15-க்கு பதிலாக 7.50-க்கு புறப்படும். இந்த ரயில் 10.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர், வஞ்சிபாளையம், சோமனூர், சூலூர் சாலை, இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...