பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க இளைஞர்களுக்கு அழைப்பு!

கோவை வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையத்தை மானிய அடிப்படையில் அமைப்பதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரும் வகையில் பல்வேறு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது பராமரிப்பு மையத்தை மானியம் மூலம் அமைத்து தரும் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க தற்பொழுது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த மையங்கள் அமைக்கப்படுவதாகும், தொழில் முனைவோர் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இந்த மையங்கள் மானியத்தில் அமைத்து தரப்படும் என்றும், இந்த மையங்களை அமைப்பதற்கு எட்டு லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில் இதில் 50 சதவிகிதம் நான்கு லட்சம் ரூபாய் மானிய அடிப்படையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்கள் அமைக்க போதிய இட வசதியும் மும்முனை மின்சார இணைப்பு கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த விவரங்கள் அறிவதற்கு கோவை மாவட்டத்திற்கு 0422-2434838, 0422-2966500 என்ற எண்ணிலும், பொள்ளாச்சி 04259-292271 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...