கோவை வெள்ளியங்கிரி மலையில் வன விலங்கு நடமாட்டம்: மலையேற பக்தர்களுக்கு தடை - வனத்துறை அறிவிப்பு….!

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் உலா வருவதால், மலை ஏற்றதுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


கோவை: கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவை காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையேறி சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்..

குறிப்பாக, பௌர்ணமி மற்றும் திருவிழா காலங்களில் மலை ஏற, பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி மற்றும் சிவராத்திரி போன்ற திருவிழாக் காலங்கள் முடிவுற்ற நிலையல், தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் உலா வருவதால், அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால், வெள்ளிங்கிரி மலை ஏற பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று வனத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...