நாளை, கோவை தண்டுமாரியம்மன் கோவில் தீச்சட்டி திருவிழா: போக்குவரத்து மாற்றம் குறித்து மாநகர போலீஸ் அறிவிப்பு…!

முக்கிய நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வான "தீச்சட்டி" ஊர்வலம் நாளை, ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாளை முக்கிய நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வான தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் செல்லும் நிகழ்வு நாளை, ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பை மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

நாளை காலை நடைபெற உள்ள தீச்சட்டி ஊர்வலமானது, மணிக்கூண்டு பகுதியில் உள்ள கோணியம்மன் கோவிலில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு டவுன்ஹால், ஓப்ணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புருக்பாண்ட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, சோமசுந்தரம் மில் ரோடு வழியாக டாக்டர் நஞ்சப்பா ரோட்டை அடைந்து அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக தண்டுமாரியம்மன் கோவிலை சென்றடையும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெறும் இந்த தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை அதிகாலை 06.00 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பையாஸ் வழியாக திருச்சி சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அல்லது, பேரூர் பைபாஸ் சாலையில் சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அதே போல, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும், ஊர்வலம் புருக்பாண்ட் சாலையை அடையும் போது பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்லலாம்.

மேலும், பேரூர் சாலையிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் செட்டி வீதி, சலிவன் விதி வழியாக காந்திபார்க் அடைந்து அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அதே போல், அவிநாசி சாலை பழைய மேம்பாலம் வழியாக உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும் அண்ணா சிலை சந்திப்பு அல்லது ஜே.எம். பேக்கரி சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி ஒசூர் ரோடு, பந்தயச் சாலை வழியாகவோ அல்லது ரயில் நிலையம் வழியாகவோ திருச்சி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அதேபோல, திருச்சி சாலையில் இருந்து டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்களில் கனரக வாகனங்கள், கிளாசிக் டவர் வழியாக சுங்கம் பைபாஸ் அடைந்தும், இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாகவும், உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேலும், ஊர்வலத்தின் இறுதிப்பகுதி முக்கியமான விதிகளை கடக்கும்போது, போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே போல, லாரிப் போக்குவரத்து தற்போது நடைமுறையில் உள்ளது போல் அல்லாமல் காலை 06.00 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை அவிநாசி ரோடு மற்றும் ஊர்வல பாதை உள்ள பகுதியில் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும், மாநகர காவல்துறையினர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...